Thursday, November 18, 2010

அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...

அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...

ஒரு அரபு பெண்ணைப் பற்றி முஹம்மதுவிடம் அவரது தோழர்கள் அறிவித்தார்கள், அந்தப் பெண்ணை அழைத்துவரும் படி முஹம்மது கூறினார், அந்தப் பெண்ணும் வந்தாள். தன்னை திருமணம் செய்துக்கொள்ளும்படி முஹம்மது கூற, அவரை திருமணம் செய்துக்கொள்ள விரும்பாத அந்தப் பெண் முஹம்மதுவிடமிருந்து காக்கும்படி அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரினாள், முஹம்மது அப்பெண்ணை அனுப்பிவிட்டார். இந்த நிகழ்ச்சி சஹீஹ் புகாரி என்றுச் சொல்லக்கூடிய ஹதீஸ் தொகுப்பில் உள்ளது, கீழே அந்த ஹதீஸை கொடுத்துள்ளேன், படிக்கவும். அதன் பிறகு சில கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளது, இஸ்லாமியர்கள் அவைகளுக்கு பதில்களைத் தருவார்களா?

பாகம் 6, அத்தியாயம் 74, எண் 5637

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்களிடம் ஓர் அரபுப் பெண்ணைப் பற்றிக் கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணை (மணம் புரிந்து கொள்ள) அழைத்து வரும்படி அபூ உஸைத் அஸ்ஸாஇதீ(ரலி) அவர்களுக்கு உத்தரவிட, அவர் அப்பெண்ணை அழைத்து வர ஆளனுப்பினார். அவ்வாறே அந்தப் பெண் வந்து 'பன} சாஇதா' குலத்தாரின் கோட்டை ஒன்றில் தங்கினார். நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டு அப்பெண்மணியிடம் வந்து, அவர் (தங்கியிருந்த) இடத்தில் நுழைய அங்கே அந்தப் பெண் தலையைக் கவிழ்த்தபடி (அமர்ந்து) இருந்தார். நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் (தம்மை மணந்துகொள்ள சம்மதம் கேட்டுப்) பேசியபோது அவள், 'உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று சொன்னாள். நபி(ஸல்) அவர்கள் 'என்னிடமிருந்து உனக்குப் பாதுகாப்பு அளித்துவிட்டேன்' என்று கூறினார்கள். அப்போது மக்கள் (அந்தப் பெண்ணிடம்), 'இவர்கள் யார் என்று உனக்குத் தெரியுமா?' என்று கேட்க, அவள் 'தெரியாது' என்று பதிலளித்தாள். மக்கள், 'இவர்கள் தாம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உன்னைப் பெண் பேசுவதற்காக வந்தார்கள்' என்று கூறினார்கள். அந்தப் பெண் 'அவர்களை மணந்து கொள்ளும் நற்பேற்றை நான் இழந்து துர்பாக்கியவாதியாகி விட்டேனே' என்று (வருத்தத்துடன்) கூறினாள். . . . . . .

உலக மக்கள் பின்பற்றத் தகுந்த ஒரு நல்ல மாதிரியான வாழ்வை முஹம்மது வாழ்ந்துச் சென்றுள்ளார் என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள். எல்லாரும் முஹம்மது சொல்வதை கேட்டு பின்பற்றவேண்டும் என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள். முக்கியமாக கிறிஸ்தவர்கள் நம்பும் தீர்க்கதரிசிகளைப் போல‌ இவரும் இறைவன் அனுப்பிய நபி என்று சொல்கிறார்கள்.

இஸ்லாமியர்களின் வார்த்தைகளை ஆராயாமல் அப்படியே நம்பி இஸ்லாமை ஏற்றுக்கொண்டு உலக மக்கள் தங்கள் வாழ்வை நாசமாக்கிக்கொள்ள முடியாது. இஸ்லாம் நமக்குச் சொல்லும் முஹம்மதுவின் வாழ்க்கையை ஆராய்ந்து சரி பார்த்து முடிவு எடுக்கவேண்டும்.

நாம் மேலே கண்ட ஹதீஸின் படி, முஹம்மது ஒரு ஆன்மீக வழிகாட்டி என்று நம்பமுடியாது, அவருடைய எண்ணம், செயல் மற்றும் நோக்கம் என்ன என்பதை ஓரளவிற்கு இந்த ஹதீஸ் மூலமாக அறிந்துக்கொள்ளலாம். ஆகவே, கீழ்கண்ட கேள்விகளுக்கு இஸ்லாமியர்கள் பதில் கூறுவார்களா? சரியான பதிலைக் கூறி, தங்கள் முஹம்மது மீது சுமத்தப்படும் களங்கத்தை துடைப்பார்களா? இது எல்லா இஸ்லாமியர்களின் மீது விழுந்த கடமையல்லவா?

மேலே கண்ட ஹதீஸின் அடிப்படையில், இஸ்லாமியர்களுக்கு சில கேள்விகள்:

1) முஹம்மதுவிடம் யாரைப் பற்றி கூறப்பட்டது?


2) யார் முஹம்மதுவிடம் அந்த அரபுப்பெண்ணைப் பற்றி கூறியிருப்பார்கள்? (நபித்தோழர்கள் என அழைக்கப்பட்ட முஹம்மதுவின் தோழர்கள் கூறியிருப்பார்கள் சரியா தவறா?)


3) முஹம்மதுவிடம் என்ன கூறியிருப்பார்கள்? அந்த அரபுப்பெண்ணுக்கு உடல் நிலை சரியில்லை ஒரு முறை வந்து அவளுக்காக அல்லாஹ்விடம் துவா செய்யுங்கள் (வேண்டிக்கொள்ளுங்கள்) என்று கூறியிருப்பார்களா? அல்லது அவளுக்கு இருக்கும் பிரச்சனையை தீர்த்துவைக்கும் படி கூறியிருப்பார்களா?

4) மேலே கண்ட ஹ‌தீஸின் படி, அவளுடைய அழகைப் பற்றி வர்ணித்து கூறியிருப்பார்கள் என்பது என் கருத்து, இது சரியா தவறா?

5) அந்தப் பெண்ணை அழைத்துவந்த பிறகு, முஹம்மது அப்பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள தன் விருப்பத்தை தெரிவித்ததிலிருந்து, அப்பெண்ணின் அழகு பற்றி தான் நபித்தோழர்கள் அவரிடம் கூறியிருப்பார்கள் என்று அறிய முடிகிறது.

6) கேள்விகள் 4, 5 தவறானது என்று இஸ்லாமியர்கள் சொல்வார்களானால், வேறு எதைப் பற்றி நபித்தோழர்கள் கூறியிருப்பார்கள் என்று இஸ்லாமியர்கள் விளக்குவார்களா?

7) முஹம்மதுவிற்கு அனேக மனைவிகள் இருக்கும் போது, இன்னும் மனைவிகள் முஹம்மதுவிற்கு தேவை என்று நபித்தோழர்களுக்கு எப்படித் தெரியும்?

8) முஹம்மதுவின் விருப்பம்/ஆசை/காமம் எதுவென்று நபித்தோழர்களுக்கு நன்றாக தெரிந்து இருக்கிறது, அதனால், தான் தங்கள் குருவிற்கு விருப்பமானது எது என்று புரிந்துக்கொண்டவர்களாக கண்ணில் பட்ட அழகான பெண் பற்றி தங்கள் குருவிடம் சொன்னார்கள். பெண்கள் என்றால் அதிக விருப்பமில்லாத ஒரு மனிதரிடம் அவருடைய சீடர்கள் பெண்களைப் பற்றி கூறுவார்களா?

9) அபூ உஸைத் அஸ்ஸாஇதீ(ரலி) என்பவர் என்ன செய்யவேண்டும் என்று முஹம்மது உத்தரவிட்டார்?

10) முஹம்மதுவின் இந்த உத்தரவின் படி, அந்த அரபுப்பெண்ணை அபூ உஸைத் அழைத்துவந்தாரா? இல்லையா?

11) அழைத்து வரப்பட்ட பெண் எங்கு தங்க வைக்கப்பட்டாள்? ஏன் அந்த பெண் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தங்கவைக்கப்பட்டாள்?

12) ஒரு குறிப்பிட்ட கோட்டையில் தங்கி இருந்த அந்த பெண்ணை சந்திக்கச் சென்றது யார்?

13) முஹம்மது அப்பெண்ணிடம் என்ன கூறினார்?

14) முஹம்மது தம்மை திருமணம் செய்துக்கொள்ளும்படி அப்பெண்ணிடம் கூறினாரா?

15) முஹம்மதுவின் கேள்விக்கு அந்தப்பெண் கொடுத்த பதில் என்ன?

16) முஹம்மதுவை திருமணம் செய்துக்கொள்ள அந்தப் பெண் சம்மதம் தெரிவித்தாளா?

17) ஏன், அந்தப் பெண் "உம்மிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோருகிறேன்" என்று கூறினாள்?

18) ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளவேண்டும் என்ற விருப்பமிருப்பவர்கள், அப்பெண்ணை தனியாக அழைத்து, ஒரு கோட்டையில் தங்க வைத்து பெண் பேசுவார்களா? அல்லது அப்பெண்ணின் பெற்றோர்களிடம், அல்லது பெரியவர்களிடம் முதலாவது தன் விருப்பத்தைச் சொல்லி, பெற்றோர்கள் ஒப்புக்கொண்ட பிறகு, பெற்றோர்களின் உதவியுடன் தன் திருமண விருப்பத்தை அப்பெண்ணிடம் சொல்ல முயற்சி எடுப்பார்களா?

19) ஒரு வழிகாட்டி என்ற நிலையில் இருக்கும் முஹம்மதுவிற்கு, இதுவரை இருக்கும் மனைவிகள் போதாதா? இன்னும் மனைவிகள் தேவையா? கணக்கில்லாமல் திருமணம் செய்துக்கொள்ள விரும்பும் ஒருவர் எப்படி உலக மக்களுக்கு வழிகாட்டியாக இருக்க முடியும்?

20) அந்த பெண்ணின் மறுப்பிற்கு முஹம்மது அளித்த பதில் என்ன?

இப்போது நாம் பார்க்கப்போகும் கேள்விகள், ரௌடித்தனம் செய்து அப்பெண்ணை கடத்திக்கொண்டு வந்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தை உண்டாக்கும்.

21) முஹம்மது "பாதுகாப்பு" அளித்துவிட்டேன் என்று கூறிச் சென்றுவிட்ட பிறகு, அந்த பெண்ணிடம் மக்கள் என்ன கூறினார்கள்?

22) "இவர் யார் என்று உனக்குத் தெரியுமா" என்று மக்கள் கேட்டபோது, தனக்கு "தெரியாது" என்று அப்பெண் பதில் கூறியிருக்கிறாள். அப்படியானால், இந்தப் பெண்ணை நபித்தோழர் அபூ உஸைத் எப்படி அழைத்துக்கொண்டு வந்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் தங்க வைத்திருந்தார்?

23) அந்தப்பெண்ணை அபூ உஸைத் அழைக்க சென்றபோது, அப்பெண்ணிடம் என்ன கூறியிருந்திருப்பார்?

24) உன்னை இறைத்தூதர் திருமணம் செய்துக்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார் என்று சொல்லி அழைத்து இருந்திருப்பாரா?

25) அல்லது ஒரு முக்கியமான நபர் உன்னை அழைத்துள்ளார், அவர் உன்னிடம் பேசவேண்டுமாம் என்று சொல்லி இருந்திருப்பாரா?

26) யாராவது ஒரு பெண், உன்னை யாரோ ஒருவர் அழைக்கிறார் வா! என்று அழைக்கும் போது வந்துவிடுவாளா?

27) மேற்கண்ட ஹதீஸின் படி, தன்னிடம் பேசியவர் "இறைத்தூதர்" என்று தனக்கு தெரியாது, அல்லது யார் என்று தனக்குத் தெரியாது என்று அப்பெண் கூறியிருப்பதிலிருந்து, அபூ உஸைத் அப்பெண்ணை "பலவந்தப்படுத்தி, கடத்திக்கொண்டு வந்து இருக்கவேண்டும்" என்று புரிகிறது? இந்த முடிவு சரியானது இல்லை என்று நாம் கருதினால்,

தன்னை அழைத்தவர் யார்?

ஏன் என்னை அழைக்கிறார்?

நான் ஏன் வரவேண்டும்?

என்னை கட்டாயப்படுத்தி வரவேண்டும் என்றுச் சொல்லும் நீங்கள் யார்?

உங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது?

என்று அப்பெண் முதலிலேயே கூறியிருப்பாள், அந்தப் பெண்ணின் இந்த கேள்விகள் சாத்தியமா இல்லையா?

28) கேள்வி எண் 27ல் கூறப்பட்ட கேள்விகளை அப்பெண் கேட்டு இருந்திருப்பாள், அப்போது அபூ உஸைத் என்ன பதில் கூறியிருந்திருப்பார்? இதற்கெல்லாம் நான் பதில் சொல்லமாட்டேன், கூப்பிட்டால் வரவேண்டும் அவ்வளவு தான் என்று கூறியிருப்பாரா? அல்லது என்னை அனுப்பியவர் இறைத்தூதர் முஹம்மது ஆவார், அவர் உன்னிடம் பேசவேண்டுமாம், அவர் உன்னை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார் என்று பதில் சொல்லியிருந்திருப்பாரா?

29) நீ கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் சொல்லமாட்டேன் என்றுச் சொல்லியிருந்தால், அந்தப்பெண் வர மறுத்து இருந்திருப்பாள், அப்போது அவளை கடத்திக்கொண்டு வந்து, அந்த கோட்டையில் இருக்கும் படி செய்திருப்பார்கள், ஆக, இந்த செயல், முஹம்மதுவின் தோழர்கள் தங்கள் குருவிற்காக பெண்களை கட்டாயப்படுத்தி, கடத்திக்கொண்டு வருகிறவர்களாக தென்படுவார்கள், இது சரியானதா? இது ஏற்கத்தகுந்ததா?

30) இல்லை, கேள்வி 29ல் கூறப்பட்டது தவறு, அபூ உஸைத், அப்பெண்ணிடம் யார் அழைக்கிறார்கள், என்ன காரணத்திற்காக அழைக்கிறார்கள் என்று சொல்லி இருப்பார் என்று இஸ்லாமியர்கள் சொன்னால், மேற்கண்ட ஹதீஸின் படி, இது கூட ஏற்கத்தகுந்தது அல்ல, காரணம் என்னவென்றால், மக்கள் அப்பெண்ணிடம் கேள்வி கேட்டப்போது, "அவர் யார் என்று எனக்கு தெரியாது" என்று பதில் அளித்து இருக்கிறாள். ஆக, அப்பெண் சொல்லிய பதில் மூலமாக நாம் அறிவது என்னவென்றால், அந்தப்பெண்ணை பயப்படவைத்து, கடத்திக்கொண்டு வந்து இருக்கவேண்டும்? அல்லது அவர் இறைத்தூதர் என்று ஏற்கனவே தெரிந்திருந்தும் அப்பெண் அவரை திருமணம் செய்துக்கொள்ள விருப்பமில்லாதவளாக "எனக்கு அவர் யார் என்று தெரியவில்லை என்று பொய் சொல்லி இருக்கவேண்டும்".

31) அந்தப் பெண் பொய் சொல்லியிருந்தாலும், உடனே, அபூ உஸைத் சொல்லியிருப்பார், இல்லை, இந்த பெண் பொய் சொல்கிறாள், நான் ஏற்கனவே அவளிடம் எல்லா விவரங்களையும் சொல்லியிருக்கிறேன் என்று சொல்லியிருப்பார்கள். ஆனால், இப்படி நடந்ததாக தெரியவில்லை. ஆக, தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி கொண்டு வந்திருக்கவேண்டும், தன்னை பாதுக்காத்துக்கொள்ள அந்த பெண் "அல்லாஹ்விடமிருந்து பாதுகாப்பு" கோரியிருக்கவேண்டும், இந்த முடிவிற்குத் தான் நாம் வரமுடியும்.

32) "நான் துர்பாக்கியவதியாகிவிட்டேன்" என்று அந்தப் பெண் சொன்னாள் என்று ஹதீஸ் சொல்வது ஏற்கத்தகுந்தது அல்ல, ஏனென்றால், இந்தப் பெண் தன் தவறுக்காக வருந்துகிறாள், உம்மை மண‌ந்துக்கொள்ளும் நற்பேற்றை இழந்தேன் என்று அப்பெண் வருந்துகிறாள் என்று முஹம்மதுவிற்கு மறுபடியும் சொல்லியிருந்தால், அவர் வந்து அவளை திருமணம் செய்துக்கொண்டு இருந்திருப்பார், இதில் எந்த சந்தேகமும் இல்லை. அறியாமையில் தவறு செய்தாள், இப்போது விரும்புகிறாள் எனவே திருமணம் செய்துக்கொள்வதில் தவறு இல்லை என்று முஹம்மது சொல்லி திருமணம் செய்துகொண்டு இருந்திருப்பார். இந்த பெண்ணிடம் ம‌றுபடியும் பேசி திருமணம் செய்துக்கொண்டதாக, ஏதாவது ஹதீஸ் இருந்தால் இஸ்லாமியர்கள் முன்வைக்கலாம்.

33) முஹம்மதுவின் ஒவ்வொரு திருமணத்திற்கும் ஒரு நல்ல காரணம் இருக்கும், ஒரு நியாயம் இருக்கும் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள், முஹம்மது இப்பெண்ணை திருமணம் செய்துக்கொள்வதற்கு அல்லாஹ்விடமிருந்து இறங்கிய காரணமென்ன? இப்பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள முஹம்மது விரும்பியதற்கு காரணமென்ன? அந்த பெண்ணின் அழகா? அல்லது வேறு என்ன காரணம் இருக்கமுடியும்? உம்மை திருமணம் செய்துக்கொள்ளமாட்டேன் என்றுச் சொன்னாள், சரி என்று ஒப்புக்கொண்டு சென்றுவிட்டார், இதில் தெய்வீக காரணம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. விரும்பினார், மறுத்துவிட்டாள் சரி என்று விட்டுவிட்டார் அவ்வளவு தான். முஹம்மதுவிற்கு பெண்கள் விஷயத்தில் எப்போதும் திருப்தி இருக்காதா?

மேற்கண்ட விவரங்களிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், முஹம்மதுவின் விருப்பம் என்ன? அவருடைய நாடித்துடிப்பு என்னவென்று தன்னுடைய தோழர்களுக்கு தெரிந்து இருக்கிறது. எனவே கண்ணில் பட்ட நல்ல அழகான பெண்கள் பற்றி அவர்கள் அவரிடம் கூறியிருக்கிறார்கள். மேற்கண்ட ஹதீஸ் மூலம் அறிவது என்னவென்றால், கட்டாயப்படுத்தி அழைத்துக்கொண்டு வந்து ஒரு அறைக்குள் அடைத்து சம்மந்தம் பேசும் இறைத்தூரதை நாம் காண்கின்றோம். அல்லாஹ்விடம் அப்பெண் பாதுகாப்பு கோரிவிட்டதால், அவள் தப்பித்துவிட்டாள். இத்தனை மனைவிகள் தனக்கு இருக்கும் போதும், இன்னும் ஏன் பெண்ணாசை முஹம்மதுவிற்கு விடவில்லை?

இவரையா எல்லாரும் பின்பற்றவேண்டும் என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள்... பீஜே போன்றவர்கள் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்று நிகழ்ச்சி நடத்துகின்றார். இப்படிப்பட்ட முஹம்மது ஸ்தாபித்த மார்க்கமா இனிய மார்க்கம்.. அந்தோ பரிதாபம்.

சரி, மேற்கண்ட ஹதீஸுக்கும் கேள்விகளுக்கும் சரியான நேர்மையான பதிலை இஸ்லாமியர்களில் யாராவது பதித்தால், அவைகள் சரியாக இருக்கும் பட்சத்தில் இந்த கட்டுரையை நான் எடுத்துவிடுவேன். (இப்படி நான் சொன்னேன் என்றுச் சொல்லி, பிஜே அவர்கள், இந்த ஹதீஸ் பலவீனமான ஹதீஸ், இது பொய்யான ஹதீஸ் என்றுச் சொன்னால், நான் ஒப்புக்கொள்ளமாட்டேன், ஏனென்றால், பிஜே அவர்கள் சொல்வது போல ஹதீஸ்களை ஒதுக்கினால், கடைசியில் ஒன்றுமே மிஞ்சாது).

Tuesday, November 2, 2010

இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?

இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?

முஹம்மதுவிற்கு அனேக மனைவிகள் இருந்தார்கள். இருந்தபோதிலும் அவருக்கு தொடர்ந்து திருமணம் செய்துக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் (அ) ஆசை இருந்துக்கொண்டே இருந்தது. எந்த பெண்ணாவது முஹம்மதுவை திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தால், முஹம்மது அப்பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளலாம். இது உலகத்தில் எந்த ஒரு இஸ்லாமியருக்கும் இல்லாத தனிப்பட்ட சலுகை முஹம்மதுவிற்கு மட்டும் அல்லாஹ் கொடுத்துள்ளார்.

ஆனால், துரதிஷ்டவசமாக முஹம்மது சில பெண்களை விரும்பிய பின்னரும் அப்பெண்கள் முஹம்மதுவை திருமணம் செய்ய மறுத்துள்ளனர்.

கீழ்கண்ட புகாரி ஹதீஸை படிக்கவும், அதன் கீழே சில கேள்விகள் இஸ்லாமியர்களுக்காக கேட்கப்படுகிறது.

பாகம் 6, அத்தியாயம் 68, எண் 5255
அபூ உசைத் மாலிக் இப்னு ரபீஆ அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) 'அஷ்ஷவ்த்' (அல்லது 'அஷ்ஷவ்ழ்') என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதனருகில் இருந்த வேறு) இரண்டு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம்.

அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இங்கேயே அமர்ந்திருங்கள்' என்று சொல்லிவிட்டுத் தோட்டதிற்குள்ளே சென்றார்கள். (அங்கு) அல்ஜவ்ன் குலத்துப் பெண் அழைத்து வரப்பட்டுப் பேரீச்சந் தோட்டத்திலிருந்த ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அப்பெண்(ணின் பெயர்) உமைமா பின்த் நுஅமான் இப்னி ஷராஹீல் (என்பதாகும்). அவருடன் அவரை வளர்த்த செவிலித் தாயும் இருந்தார். (அப்பெண்ணுக்கும் நபியவர்களுக்கும் முன்பே திருமண ஒப்பந்தம் முடிந்திருந்ததால்) அப்பெண் இருந்த வீட்டிற்குள் நபி(ஸல்) அவர்கள் நுழைந்து 'உன்னை எனக்கு அன்பளிப்புச் செய்!' என்று கூறினார்கள். அந்தப்பெண் 'ஓர் அரசி, தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா?' என்று கேட்டார். அவரை அமைதிப்படுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தை அவரின் மீது வைக்கப் போனார்கள். உடனே அவர் 'உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி 'கண்ணியமான (இறை) வனிடம் தான் நீ பாதுகாப்புக் கோரியிருக்கிறாய்' என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள். மேலும், 'அபூ உசைதே! இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அவளுக்கு அளித்து, அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் கொண்டுபோய்விட்டு விடு' என்று கூறினார்கள்

இஸ்லாமியர்களுக்கு சில கேள்விகள்:

1) தோட்டத்திற்குள் முஹம்மது ஏன் சென்றார்?

2) அந்த தோட்டத்திற்குள் ஒரு அறைக்குள் இருந்தது யார்?

3) ஏன் அந்த பெண் அந்த தோட்டத்தில் இருந்த அறையில் கொண்டு வரப்பட்டாள்?

4) முஹம்மது அப்பெண்ணிடம் என்ன கூறினார்?

5) அவருக்கு பதிலாக அந்தப் பெண் என்ன கூறினாள்?

6) மேற்கண்ட ஹதீஸில் அந்தப்பெண் முஹம்மதுவை என்னவென்று குறிப்பாகச் கேவலமாக சொன்னாள்?

7) அரசி யார்? இடையன் யார்?

8) தன்னை இடையன் என்றுச் சொல்லிய பிறகும் முஹம்மது என்ன செய்தார்?

9) அந்த பெண் முஹம்மதுவிடமிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள யாரிடம் பாதுகாப்பு கோரினாள்?

10) ஒரு வேளை அந்தப்பெண் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனிடம் பாதுகாப்பு கோரியிருந்தால் என்ன நடந்துஇருக்கும்?

11) முஹம்மது அந்தப் பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள ஒப்பந்தம் புரிந்திருந்தாரா?

12) திருமண ஒப்பந்தம் புரியும் போதும் மணப்பெண்ணுடைய விருப்பம் தெரிவிக்க வேண்டியது அவசியமா இல்லையா?

13) திருமணத்திற்கு "ஆம்" சொல்லி அந்தப் பெண் சொல்லியிருந்தால், இப்போது மட்டும் ஏன் "முஹம்மதுவை இடையன்" என்றுச் சொல்லி மறுக்கிறாள்?

14) திருமண ஒப்பந்தம் முறைப்படி நடந்திருந்தால், இந்தப்பெண் அதற்கு ஒப்புதல் அளித்து இருந்திருந்தால், இப்போது மட்டும் ஏன் அப்பெண் முஹம்மது தன்னைத் தொடவும் அனுமதி அளிக்கவில்லை?

15) திருமண ஒப்பந்தம் செய்த முஹம்மது ஏன் இந்தப்பெண்ணை தன் சொந்த வீட்டில் தங்க வைக்காமல், ஏதோ ஊருக்கு வெளியே அல்லது ஒரு தோட்டத்திற்குள்ளே தனியாக தங்க வைத்தார்? (பெரிய பணக்காரர்கள் தங்கள் வைப்பாட்டிகளை லாட்ஜில் தங்க வைப்பதுப் போல).

16) நியாயமான திருமணம் என்று இதனை முடிவு செய்தால், குறைந்த பட்சம், பெண் வீட்டிலாவது தங்க வைத்து இருந்திருக்கவேண்டுமே?

17) முஹம்மதுவின் இதர மனைவிகள் தங்கும் இடத்தில் (அ) வீட்டில் ஏன் இந்த பெண் தங்க வைக்கப்படவில்லை?

18) ஏதோ தவறு செய்வது போல, ஊருக்கு வெளியே அதுவும் ஒரு பெண்ணை கடத்திக்கொண்டு வந்து ஒரு தனி அறையில் அடைத்து வைப்பது போல ஒரு நபி ஏன் இந்த பெண்ணை தங்க வைத்திருந்தார்?

19) இந்த பெண் குறிப்பாக அந்த தோட்டத்தில் ஒரு அறையில், முஹம்மது வருவார் என்று சொல்லி வைத்தாற் போல தங்கவைக்கப்பட்டு இருக்கிறாள் என்பது இதன் மூலம் விளங்குகிறதல்லவா?

20) இந்த பெண் புத்திசாலித்தனமாக "முஹம்மது தன்னை தொடக்கூடாது என்றுச் சொல்லி, அல்லாஹ்விடமிருந்து பாதுகாப்பு கோரியதால்" முஹம்மது அடிபணிந்து அவளை விட்டுவிட்டார். ஒரு வேளை அல்லாஹ் அல்லாத வேறு இறைவன் பெயரைச் சொல்லி அவள் பாதுகாப்பு கோரியிருந்தால், அந்த அறையில் என்ன நடந்து இருந்திருக்கும்?

21) தன் வலிமையை பயன்படுத்தி பெற்றோர்களை பயப்படவைப்பது, உன் பெண்ணை நான் திருமணம் செய்துக்கொள்கிறேன் என்றுச் சொல்லி ஒப்பந்தம் ஒன்று போடுவது, அந்த பெண்ணை தனியே எங்கேயோ ஒரு அறையில் தங்க வைக்கச் சொல்வது, பிறகு அந்த பெண்ணோடு உடலுறவு கொள்ள அங்குச் செல்வது, அப்பெண் மறுத்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரினால், உடனே விவாகரத்துச் செய்துவிட்டு சென்றுவிடுவது. இது தான் ஒரு நபிக்கு இருக்கவேண்டிய குணமா? இது தான் உலக மக்கள் பின்பற்றத் தகுந்த ஒரு நல்ல நடத்தையா?

22) திருமணம் என்றுச் சொன்னால், பெண்ணை கேட்காமல் திருமண ஒப்பந்தம் போடுவது, பிறகு உடலுறவிற்கு அப்பெண்ணிடம் செல்வது இதுதான் முஹம்மதுவைப் பொறுத்தமட்டில் திருமணமா?

23) முஹம்மதுவின் ஒவ்வொரு திருமணத்திற்கும் ஒரு நல்ல காரணம் இருக்கும், ஒரு நியாயமான காரணம் இருக்கும், மற்றவர்களின் நன்மை அடங்கியிருக்கும் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள் இந்த மேற்கண்ட ஹதீஸில் சொல்லப்பட்ட திருமண ஒப்பந்தம் மூலமாக, எந்த நன்மை யாருக்கு உண்டாகி இருந்தது என்று விளக்க கடமைப்பட்டுள்ளார்கள்?

24) அல்லாஹ்வின் மிகப்பெரிய நபி, அதுவும் கடைசி நபியைப் பார்த்து "நான் ஒரு அரசி, நீ ஒரு இடையன்" உன்னைப்போல உள்ள நபருக்கு ஒரு அரசி அன்பளிப்பாக தருவாளா என்று ஒரு பெண் சொல்லும் படி நடந்துக்கொண்டாரே, இதனை கண்டித்து அல்லாஹ் வசனம் எதுவும் இறக்கவில்லையோ? அல்லது இது என் நபிக்கு சர்வ சாதாரணமான விஷயம் தானே என்று அல்லாஹ் விட்டுவிட்டாரா?

25) அந்த இடத்தில், அந்த குறிப்பிட்ட தோட்டத்தில் அந்த அறையில் தங்க வை, நான் அந்த மணித்துளியில் வந்து என் வேலையை முடித்துக்கொள்கிறேன் என்றுசொல்லி வைத்தாற் போல, தன் தோழர்களை வேறு இடத்தில் உட்கார வைத்துவிட்டு, உடலுறவு கொள்வதற்கு முஹம்மது வந்துள்ளார், இது ஒரு நல்ல மனிதருக்கு அல்லது ஆன்மீக தலைவருக்கு தகுதியான செயலாக தெரியவில்லையே! இஸ்லாமியர்களே உங்களுக்கு இப்படி தோன்றவில்லையா?

இந்த திருமண ஒப்பந்தம், மற்றும் முஹம்மதுவின் மேற்கண்ட நிகழ்ச்சி எந்த வகையில் இஸ்லாமுக்கு நன்மை செய்கிறது அல்லது இது பின்பற்றத்தகுந்த ஒரு நடத்தையா? முஹம்மது நடந்துக்கொண்டது போல, இந்த ஹதீஸை படிக்கும் இஸ்லாமியர்களின் தந்தை, ஒரு பெண்ணைப் பற்றி அவர்களின் பெற்றோர்களிடம் பேசி, ஒப்பந்தம் போட்டு, அந்தபெண்ணை ஒரு லாட்ஜில் ஒரு அறையில் தங்க வைத்துவிட்டு, பிறகு அவளிடம் சென்று, உன்னை எனக்கு அன்பளிப்பாக கொடு என்றுச் சொல்லும் போது, அந்த பெண் நீ ஒரு இடையன் நான் ஒரு அரசி உனக்கு இது தகுதியில்லை என்றுச் சொன்னால், உங்கள் தந்தையைப் பற்றி பெருமித்தோடு தலை நிமிர்ந்து நடந்துச் செல்வீர்களா?

சிந்தியுங்கள்....
உங்கள் இஸ்லாமிய ஆதாரமாகிய சஹீஹ் புகாரி ஹதீஸிலிருந்து ஒரு துகள் இது...

இவரையா கிறிஸ்தவர்கள் பின்பற்றவேண்டும் என்று சொல்கிறீர்கள்...?

Friday, October 29, 2010

முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்

முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்

கைபர் என்ற ஊரை திடீரென்று தாக்கி அம்மக்களை கொள்ளையிட்டு, கொன்று குவித்து, அங்கிருக்கும் பெண்களை அடிமைகளாக முஹம்மது பிடித்தார், மற்றும் தனக்காக ஷபியா என்ற பெண்ணையும் எடுத்துக்கொண்டார் என்று சஹீ புகாரி ஹதீஸில் இன்னும் பல விவரங்களோடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைப் பற்றிய நம்முடைய முந்தைய கட்டுரையை இங்கு படிக்கவும்:



கைபரில் பிடித்த பெண்ணோடு முஹம்மது உடலுறவு கொள்ளும் அந்த இரவு, அவருடைய தோழர் வெளியே கதவருகே இரவெல்லாம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்? மற்றும் காலை முஹம்மதுவை கண்டவுடன் என்ன கூறினார்? அதற்கு முஹம்மது என்ன பதில் சொன்னார்? என்பதை அல் தபரி முஹம்மதுவின் வாழ்க்கை சரிதையிலிருந்து படியுங்கள்.

இறைத்தூதர் ஷஃபிய்யாவோடு உடலுறவு கொண்டு இருந்த அந்த இரவு, அபூ அய்யுப் என்பவர் அந்த கதவு பக்கத்தில் இரவெல்லாம் நின்றுக்கொண்டு இருந்தார். காலையில் அபூ அய்யுப் இறைத்துதரை பார்த்தவுடன் "அல்லாஹு அக்பர்" என்று கூறினார், இவர் தன்னுடன் ஒரு வாளையும் வைத்திருந்தார். இவர் இறைத்தூதரைப் பார்த்து, "ஓ அல்லாஹ்வின் தூதரே, இந்த பெண்ணுக்கு திருமணம் இதற்கு முன்பு தான் நடந்தது, நீங்கள் இப்பெண்ணின் தந்தையை கொன்றுவிட்டீர்கள், அவளின் சகோதரனையும், மற்றும் கணவனையும் கொன்றுவிட்டீர்கள். ஆகையால், இந்த பெண்ணை நான் நம்பவில்லை (உங்களுக்கு இவள் மூலமாக ஆபத்துவந்துவிடுமோ என்று பயந்து இரவெல்லாம் காவல் காத்தேன்" என்றார்). இதைக் கேட்டு இறைத்தூதர் சிரித்தார் மற்றும் நீ செய்தது "நல்லது" என்றார். (அல் தபரி சரித்திரம் - The History of al-Tabari, Volume XXXIX (39), p. 185; bold and underline emphasis ours)

Ibn ‘Umar [al-Waqidi] – Kathir b. Zayd – al-Walid b. Rabah – Abu Hurayrah: While the Prophet was lying with Safiyyah Abu Ayyub stayed the night at his door. When he saw the Prophet in the morning he said "God is the Greatest." He had a sword with him; he said to the Prophet, "O Messenger of God, this young woman had just been married, and you killed her father, her brother and her husband, so I did not trust her (not to harm) you." The Prophet laughed and said "Good". (The History of al-Tabari, Volume XXXIX (39), p. 185; bold and underline emphasis ours)


1) முஹம்மதுவின் தோழரின் கணிப்பு என்ன?

2) ஏன் அவர் ஒரு வாளோடு இரவெல்லாம் காவல் காத்துக்கொண்டு இருந்தார்?

3) எதிரி நாட்டு அரசரோடு முஹம்மது இரவெல்லாம் உரையாடிக்கொண்டு இருந்தாரா? திடீரென்று எதிரி நாட்டு அரசர் முஹம்மதுவை கொல்ல முயற்சி எடுத்தால் உடனே சென்று காப்பாற்றிவிடலாம் என்று இவர் நினைத்தாரா?

5) முஹம்மது செய்த கொலைகள் பற்றி அவரது தோழர் சொன்னது என்ன?

6) முஹம்மது உடலுறவில் ஈடுபட்டு இருந்த அந்தப்பெண் யார்?

7) அந்தப் பெண் ஏன் முஹம்மதுவை கொன்று போடுவாள் என்று முஹம்மதுவின் தோழர் நினைத்தார்?

8) முஹம்மதுவின் தோழருக்கு முஹம்மது கொடுத்த பதில் என்ன?

9) தன்னோடு உடலுறவு கொள்ளும் ஆணை அப்பெண் கொலை செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று முஹம்மதுவின் தோழர் பயப்பட்டால், அந்தப் பெண் விருப்பத்தோடு அம்மனிதனோடு (முஹம்மதுவோடு) இரவை கழிக்க விருப்பமில்லாமல் இருக்கிறாள் என்று தானே அர்த்தம்?

10) ஏன் அந்த பெண்ணுக்கு விருப்பமில்லை என்று முஹம்மதுவின் தோழர் நினைத்தார்? முஹம்மது அப்பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு இருந்தாரே? ஒரு மனைவி இப்படி செய்வாள் என்று முஹம்மதுவின் தோழர் ஏன் சந்தேகப்பட்டார்?

11) தன் தோழரின் கணிப்பை முஹம்மது மறுத்தாரா அல்லது ஆமோதித்தாரா?

12) முஹம்மது ஆமோதித்தார் என்றுச் சொன்னால், அதன் அர்த்தமென்ன?


இந்த கேள்விகளுக்கெல்லாம் இக்கட்டுரையின் முதலில் நான் கொடுத்த சஹிஹ் புகாரி ஹதீஸையும், இந்த அல் தபரி சரித்திர விவரத்தையும் படித்தாலே பதில் சொல்லிவிடலாம்.

சரி,

ஒரு பெண்ணை கற்பழித்தவரையா இஸ்லாமியர்கள் பின்பற்றுகிறார்கள்?
இவரையா எல்லாரும் பின்பற்றத்தகுந்த நல்ல மாதிரி என்று அல்லாஹ் கூறுகிறார்?
இவர் சொன்னதையா நம்பி கிறிஸ்தவர்கள் இஸ்லாமை நம்பவேண்டும்?

அருமையான இஸ்லாமியர்களே, ஒரு முறை உங்கள் நம்பிக்கையைப் பற்றி சுய பரிசோதனை செய்துப்பாருங்கள்.


மேலும் அறிய கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும்:



முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?

முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?

சஹீஹ் புகாரி: பாகம் 1, அத்தியாயம் 8, எண் 371

நபி(ஸல்) அவர்கள் கைபர் போருக்கு ஆயத்தமானார்கள். அங்கே நாங்கள் அதிகாலைத் தொழுகையை அதிகாலையின் வெண்மை தெரியும் முன்னர் தொழுதோம். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் ஏறினார்கள். அபூ தல்ஹா(ரலி) அவர்களும் ஏறினார். அவர்களுக்குப் பின்னால் நான் ஏறி அமர்ந்தேன். நபி(ஸல்) அவர்கள் கைபர் கணவாயினுள் சென்றார்கள். என்னுடைய மூட்டு நபி(ஸல்) அவர்களின் தொடையைத் தொட்டது. பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் தொடையிலிருந்த வேஷ்டியை நீக்கினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் தொடையின் வெண்மையை பார்த்தேன். நபி(ஸல்) அவர்கள் ஊருக்குள்ளே நுழைந்தபோது 'அல்லாஹ் பெரியவன்! கைபர் வீழ்ந்துவிட்டது! நிச்சயமாக நாம் ஒரு (எதிரிக்) கூட்டத்திடம் பகைமையுடன் இறங்கினால் எச்சரிக்கப்பட்ட அம்மக்களின் காலை நேரம் மோசமானதாம்விடும்' என்று மும்முறை கூறினார்கள். அவ்வூர் மக்கள் தங்களின் வேலைகளுக்காக வெளியே வந்தபோது நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும், 'முஹம்மதும் அவரின் பட்டாளமும் வந்துள்ளார்கள்' என்று (பதட்டமாகக்) கூறினார்கள்.

நாங்கள் கைபரைப் பலவந்தமாகக் கைப்பற்றினோம். போர்க் கைதிகளெல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டபோது 'திஹ்யா' என்ற நபித்தோழர் வந்து 'இறைத்தூதா அவர்களே! கைதிகளிலுள்ள ஒரு பெண்ணை எனக்குக் கொடுங்கள்' என்று கேட்டார். 'நீர் போய் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் சென்று ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்தார். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! 'குறைளா' மற்றும் 'நளீர்' என்ற குலத்தின் தலைவி ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணையா திஹ்யாவிற்குக் கொடுத்துள்ளீர்கள். அந்தப் பெண் தங்களுக்கே தகுதியானவள்' என்றார். அப்போது 'அப்பெண்ணையும் திஹ்யாவையும் அழைத்து வாரும்' என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள். அப்பெண் அழைத்து வரப்பட்டார். அப்பெண் வந்ததும் 'நீ கைதிகளிலிருந்து வேறொரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்' என்ற திஹ்யாவிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அப்பெண்ணை விடுதலை செய்து பின்னர் அவரைத் திருமணம் செய்தார்கள்.

இந்த ஹதீஸை அறிவிக்கிற அனஸ்(ரலி) அவர்களிடம் ஸாபித் என்ற தோழர், 'அபூ ஹம்சாவே நபி(ஸல்) அப்பெண்ணுக்கு எவ்வளவு மஹர் கொடுத்தார்கள்?' என்று கேட்டதற்கு 'அவரையே மஹராகக் கொடுத்தார்கள்; அதாவது அவரை விடுதலை செய்து பின்னர் மணந்தார்கள்' எனக் கூறினார்.

நாங்கள் (கைபரிலிருந்து) திரும்பி வரும் வழியில் 'ஸஃபிய்யா' அவர்களை உம்மு ஸுலைம்(ரலி) மணப்பெண்ணாக ஆயத்தப்படுத்தி நபி(ஸல்) அவர்களிடம் இரவில் ஒப்படைத்தார். மறுநாள் காலை நபி(ஸல்) அவர்கள் புது மாப்பிள்ளையாகத் தோன்றினார்கள். அப்போது நபி(ஸல்) ஒரு விரிப்பை விரித்து 'உங்களில் யாரிடமாவது ஏதாவது (சாப்பிடுகிற) பொருள்கள் இருந்தால் கொண்டு வந்து இதில் போடுங்கள்' என்று கூறினார்கள். உடனே ஒருவர் பேரீச்சம் பழத்தைக் கொண்டு வந்தார். வேறு ஒருவர் நெய்யைக் கொண்டு வந்தார். ஒருவர் மாவைக் கொண்டு வந்தார். (இப்படி எல்லோரும் கொண்டுவந்த) அவற்றையெல்லாம் சேர்த்து ஒன்றாகக் கலந்தார்கள். அது நபி(ஸல்) அவர்களின் 'வலீமா' எனும் மணவிருந்தாக அமைந்தது" என அனஸ்(ரலி) அறிவித்தார்.

"அவளுடைய உடல் முழுவதையும் மறைக்கும் விதத்தில் ஒரே ஆடையை அணிந்தாலும் அது அவளுக்குப் போதுமானதாகும்" என இக்ரிமா கூறினார்

1) கைபர் ஊரில் அதிகாலையில் நுழைந்து, மக்கள் தங்கள் வேலைக்கு ஆயத்தமாகி சென்றுக்கொண்டு இருக்கும் போது, அவர்கள் மீது திடீரென்று போர் புரிந்து, ஆண்களையெல்லாம் கொன்றுவிட்டு, அடிமைகளாக பிடிக்கப்பட்ட பெண்களில் ஒரு பெண்ணை தனக்கு எடுத்துக்கொண்டு அப்பெண்ணோடு உடலுறவு வைத்துக்கொண்ட ஒருவரை எப்படி மனிதருள் மாணிக்கம் என்று ஏற்றுக்கொள்ளச் சொல்கிறீர்கள்?

2) தன் குடும்பம் முழுவதும் மடிந்து இரத்த கறைகளோடு பிணங்களாக கிடக்கும் போது, அந்தப் பெண் எப்படி தன் குடும்பத்தை கொன்று அழித்த ஒரு ஆணோடு உடலுறவு கொள்ளுவாள்?

3) இதை படிக்கும் நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், உங்கள் கணவரையும், தந்தையையும், இதர குடும்பத்தார்களையும் கொன்ற ஒரு மனிதனை நீங்கள் திருமணம் செய்துக்கொள்வீர்களோ? ஆம், நான் செய்துக்கொள்வேன் என்றுச் சொல்வீர்களானால், உங்களை என்னவென்று உலகம் அழைக்கும்?

4) மேற்கண்ட இஸ்லாமிய ஆதாரம் சொல்கிறது, மறு நாள் காலையில் முஹம்மது புது மாப்பிள்ளையைப் போல இருந்தாராம்? (ஏன் இருக்கமாட்டார், புது மனைவி கிடைத்தாளே அதுவும் யூதப்பெண், மாப்பிள்ளையாகத் தான் தென்படுவார்.) இப்படிப்பட்டவரையா பின்பற்றுங்கள் என்று இஸ்லாமிய உலகம் இதர மக்களை வற்புறுத்துகிறது?

மேலும் அறிய கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும்:






Sunday, July 11, 2010

சாலையில் சமத்துவத்தை போதிக்காத முஹம்மது

முஹம்மதுவின் வழி:  சாலையில் சமத்துவத்தை போதிக்காத முஹம்மது 

சஹீ முஸ்லிம் ஹதீஸ்: புத்தகம் 26: எண் 5389

அல்லாஹ்வின் தூதர் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) கூறியதாக அபூ ஹுரைரா அறிவித்ததாவது: "யூதர்களும் கிறிஸ்தவர்களும் உங்களுக்கு முதலாவது வணக்கத்தைக் (சலாம்)  கூறும்வரையிலும் அவர்களுக்கு நீங்கள் வணக்கம் (சலாம்)  கூறாதீர்கள். அவர்களில் ஒருவரை நீங்கள் வழியில் சந்திக்கும்போது,  சாலையின் இடுக்கமான வழியில் அவர்கள் செல்லும்படி செய்யுங்கள்.


Muslim :: Book 26 : Hadith 5389
 
Abu Huraira reported Allah's Messenger (may peace be upon him) as saying: Do not greet the Jews and the Christians before they greet you and when you meet any one of them on the roads force him to go to the narrowest part of it.

கேள்விகள்:

  • ஒரு ஆன்மீக தலைவர் இப்படித்தான் தன் மக்கள் (இஸ்லாமியர்கள்) மாற்று மதத்தவர்களை நடத்தவேண்டும் என்று போதிக்கலாமா?
  • இப்படி சொல்வதின் மூலம், முஹம்மது எதை சாதிக்க முயற்சி எடுக்கிறார்? இதர மக்களோடு ஒற்றுமையுடன் வாழ்வதையா? சகோதரத்துவத்தோடு வாழ்வதையா? அல்லது இஸ்லாமியர்களின் மனதில் மாற்று மதத்தவர்கள் மீது ஒரு வெறுப்புணர்ச்சி எப்போதும் எரிந்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பதையா?
  • குறைந்தபட்சம் சாலையில் சமத்துவத்தை போதிக்காத முஹம்மது எப்படி உலகமனைத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டாக(மாதிரியாக) இருக்கிறார் என்று குர்‍ஆன் போதிக்கிறது?
  • ஒரு கிறிஸ்தவனான என்னை சாலையின் நெருக்கமான வழியில் செல்ல கட்டாயப்படுத்தச் சொல்லும் முஹம்மவை எப்படி என் வழி காட்டியாக கருதமுடியும்?
  • மக்களின் மனதில் வெறுப்புணர்ச்சியை  உண்டாக்கும் விதத்தில் ஒரு மத ஸ்தாபகர் பேசுவது சரியா?
  • இதே போல, வேற்று மதத்தவர்களின் ஆன்மீக தலைவர்கள், முஸ்லீம்களை சாலையில் கண்டால் நெருக்கமான வழியில் அவர்கள் செல்லும்படி கட்டாயப்படுத்துங்கள் என்றுச் சொன்னால், அந்த மார்க்கத்தை அமைதி மார்க்கமென்றும், அப்படிச் சொன்னவர், உலக மக்கள் பின்பற்றத்தகுந்த ஒரு மாதிரி என்றும் இஸ்லாமியர்கள் கூறுவார்களா?

முடிவு.. இஸ்லாமியர்களின் கையில்...