இஸ்லாமியர்கள் குர்ஆனையும், முஹம்மதுவின் சொல், மற்றும் செயல்களையும் [சுன்னா] பின்பற்றவேண்டும். உலக மக்கள் பின்பற்றக்கூடிய ஒரு நல்ல மாதிரி "முஹம்மதுவின் வாழ்க்கையில் உள்ளது" என்று குர்ஆன் கூறுகின்றது.
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (குர்ஆன் 33:21)
முஹம்மது ஒரு முடிவை எடுத்துவிட்டால், அதனை மாற்ற இஸ்லாமியருக்கு உரிமையில்லை.
மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்மான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (குர்ஆன் 33:36)
முஹம்மது சொல்வதை அப்படியே பின்பற்றவேண்டும், அவர் தடை செய்வதை விட்டுவிடவேண்டும்.
... (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள், இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள், மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன். (குர்ஆன் 59:7)
முஹம்மதுவையும், அவருக்கு பின்பாக வந்த காலிபாக்களையும் பின்பற்றவேண்டும்.
Those of you who live after me will see great disagreement. You must then follow my Sunnah and that of the Rightly Guided Caliphs [i.e. Abu Bakr, `Umar ibn Al-Khattab, `Uthman ibn `Affan, and `Ali ibn Abi Talib]. Hold to it, and stick fast to it. Avoid novelties [in matters of religion], for every novelty is an innovation, and every innovation is an error. (Abu Dawud)[தமிழாக்கம்: எனக்கு பின்பாக இருக்கும் நீங்கள் பலவாறு கருத்து வேறுபாடு கொள்வீர்கள். நீங்கள் என் சுன்னாவையும் (நான் சொன்னதும், செய்ததும்), அதே பல எனக்கு பின்பாக வரும் காலிபாக்களின் சுன்னாவையும் (அதாவது, அபூபக்கர், உமர், உத்மான் மற்றும் அலி போன்றவர்களின்) பின்பற்றவேண்டும். அவைகளை விட்டு விடாமல் இருங்கள். மத விவகாரங்களில் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள், புதியவைகளை புகுத்தாதீர்கள், அவைகள் தவறுகளாக இருக்கும்.(அபூ தாவுத்)
இஸ்லாமிய நூல்களாகிய குர்ஆன், ஹதீஸ்கள், மற்றும் முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்திலிருந்து மேற்கோள்களை இந்த தளத்தில் முன் வைத்து, உண்மையாகவே, உலக மக்கள் பின் பற்றக்கூடிய அளவிற்கு அவர் ஒரு நல்ல மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்தாரா இல்லையா என்பதை நாம் காண்போம்.
ஒவ்வொரு கட்டுரையிலும், இஸ்லாமிய மூலநூல்களிலிருந்து வசனங்கள், ஹதீஸ்கள் பதிக்கப்படும், அதன் பின்பு சில கேள்விகள் மட்டும் கேட்கப்படும், உண்மை எது என்பதை அறிந்துக்கொள்ளும் வேலை படிக்கும் வாசகருடையது.
No comments:
Post a Comment