Tuesday, November 2, 2010

இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?

இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?

முஹம்மதுவிற்கு அனேக மனைவிகள் இருந்தார்கள். இருந்தபோதிலும் அவருக்கு தொடர்ந்து திருமணம் செய்துக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் (அ) ஆசை இருந்துக்கொண்டே இருந்தது. எந்த பெண்ணாவது முஹம்மதுவை திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தால், முஹம்மது அப்பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளலாம். இது உலகத்தில் எந்த ஒரு இஸ்லாமியருக்கும் இல்லாத தனிப்பட்ட சலுகை முஹம்மதுவிற்கு மட்டும் அல்லாஹ் கொடுத்துள்ளார்.

ஆனால், துரதிஷ்டவசமாக முஹம்மது சில பெண்களை விரும்பிய பின்னரும் அப்பெண்கள் முஹம்மதுவை திருமணம் செய்ய மறுத்துள்ளனர்.

கீழ்கண்ட புகாரி ஹதீஸை படிக்கவும், அதன் கீழே சில கேள்விகள் இஸ்லாமியர்களுக்காக கேட்கப்படுகிறது.

பாகம் 6, அத்தியாயம் 68, எண் 5255
அபூ உசைத் மாலிக் இப்னு ரபீஆ அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) 'அஷ்ஷவ்த்' (அல்லது 'அஷ்ஷவ்ழ்') என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதனருகில் இருந்த வேறு) இரண்டு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம்.

அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இங்கேயே அமர்ந்திருங்கள்' என்று சொல்லிவிட்டுத் தோட்டதிற்குள்ளே சென்றார்கள். (அங்கு) அல்ஜவ்ன் குலத்துப் பெண் அழைத்து வரப்பட்டுப் பேரீச்சந் தோட்டத்திலிருந்த ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அப்பெண்(ணின் பெயர்) உமைமா பின்த் நுஅமான் இப்னி ஷராஹீல் (என்பதாகும்). அவருடன் அவரை வளர்த்த செவிலித் தாயும் இருந்தார். (அப்பெண்ணுக்கும் நபியவர்களுக்கும் முன்பே திருமண ஒப்பந்தம் முடிந்திருந்ததால்) அப்பெண் இருந்த வீட்டிற்குள் நபி(ஸல்) அவர்கள் நுழைந்து 'உன்னை எனக்கு அன்பளிப்புச் செய்!' என்று கூறினார்கள். அந்தப்பெண் 'ஓர் அரசி, தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா?' என்று கேட்டார். அவரை அமைதிப்படுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தை அவரின் மீது வைக்கப் போனார்கள். உடனே அவர் 'உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி 'கண்ணியமான (இறை) வனிடம் தான் நீ பாதுகாப்புக் கோரியிருக்கிறாய்' என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள். மேலும், 'அபூ உசைதே! இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அவளுக்கு அளித்து, அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் கொண்டுபோய்விட்டு விடு' என்று கூறினார்கள்

இஸ்லாமியர்களுக்கு சில கேள்விகள்:

1) தோட்டத்திற்குள் முஹம்மது ஏன் சென்றார்?

2) அந்த தோட்டத்திற்குள் ஒரு அறைக்குள் இருந்தது யார்?

3) ஏன் அந்த பெண் அந்த தோட்டத்தில் இருந்த அறையில் கொண்டு வரப்பட்டாள்?

4) முஹம்மது அப்பெண்ணிடம் என்ன கூறினார்?

5) அவருக்கு பதிலாக அந்தப் பெண் என்ன கூறினாள்?

6) மேற்கண்ட ஹதீஸில் அந்தப்பெண் முஹம்மதுவை என்னவென்று குறிப்பாகச் கேவலமாக சொன்னாள்?

7) அரசி யார்? இடையன் யார்?

8) தன்னை இடையன் என்றுச் சொல்லிய பிறகும் முஹம்மது என்ன செய்தார்?

9) அந்த பெண் முஹம்மதுவிடமிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள யாரிடம் பாதுகாப்பு கோரினாள்?

10) ஒரு வேளை அந்தப்பெண் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனிடம் பாதுகாப்பு கோரியிருந்தால் என்ன நடந்துஇருக்கும்?

11) முஹம்மது அந்தப் பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள ஒப்பந்தம் புரிந்திருந்தாரா?

12) திருமண ஒப்பந்தம் புரியும் போதும் மணப்பெண்ணுடைய விருப்பம் தெரிவிக்க வேண்டியது அவசியமா இல்லையா?

13) திருமணத்திற்கு "ஆம்" சொல்லி அந்தப் பெண் சொல்லியிருந்தால், இப்போது மட்டும் ஏன் "முஹம்மதுவை இடையன்" என்றுச் சொல்லி மறுக்கிறாள்?

14) திருமண ஒப்பந்தம் முறைப்படி நடந்திருந்தால், இந்தப்பெண் அதற்கு ஒப்புதல் அளித்து இருந்திருந்தால், இப்போது மட்டும் ஏன் அப்பெண் முஹம்மது தன்னைத் தொடவும் அனுமதி அளிக்கவில்லை?

15) திருமண ஒப்பந்தம் செய்த முஹம்மது ஏன் இந்தப்பெண்ணை தன் சொந்த வீட்டில் தங்க வைக்காமல், ஏதோ ஊருக்கு வெளியே அல்லது ஒரு தோட்டத்திற்குள்ளே தனியாக தங்க வைத்தார்? (பெரிய பணக்காரர்கள் தங்கள் வைப்பாட்டிகளை லாட்ஜில் தங்க வைப்பதுப் போல).

16) நியாயமான திருமணம் என்று இதனை முடிவு செய்தால், குறைந்த பட்சம், பெண் வீட்டிலாவது தங்க வைத்து இருந்திருக்கவேண்டுமே?

17) முஹம்மதுவின் இதர மனைவிகள் தங்கும் இடத்தில் (அ) வீட்டில் ஏன் இந்த பெண் தங்க வைக்கப்படவில்லை?

18) ஏதோ தவறு செய்வது போல, ஊருக்கு வெளியே அதுவும் ஒரு பெண்ணை கடத்திக்கொண்டு வந்து ஒரு தனி அறையில் அடைத்து வைப்பது போல ஒரு நபி ஏன் இந்த பெண்ணை தங்க வைத்திருந்தார்?

19) இந்த பெண் குறிப்பாக அந்த தோட்டத்தில் ஒரு அறையில், முஹம்மது வருவார் என்று சொல்லி வைத்தாற் போல தங்கவைக்கப்பட்டு இருக்கிறாள் என்பது இதன் மூலம் விளங்குகிறதல்லவா?

20) இந்த பெண் புத்திசாலித்தனமாக "முஹம்மது தன்னை தொடக்கூடாது என்றுச் சொல்லி, அல்லாஹ்விடமிருந்து பாதுகாப்பு கோரியதால்" முஹம்மது அடிபணிந்து அவளை விட்டுவிட்டார். ஒரு வேளை அல்லாஹ் அல்லாத வேறு இறைவன் பெயரைச் சொல்லி அவள் பாதுகாப்பு கோரியிருந்தால், அந்த அறையில் என்ன நடந்து இருந்திருக்கும்?

21) தன் வலிமையை பயன்படுத்தி பெற்றோர்களை பயப்படவைப்பது, உன் பெண்ணை நான் திருமணம் செய்துக்கொள்கிறேன் என்றுச் சொல்லி ஒப்பந்தம் ஒன்று போடுவது, அந்த பெண்ணை தனியே எங்கேயோ ஒரு அறையில் தங்க வைக்கச் சொல்வது, பிறகு அந்த பெண்ணோடு உடலுறவு கொள்ள அங்குச் செல்வது, அப்பெண் மறுத்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரினால், உடனே விவாகரத்துச் செய்துவிட்டு சென்றுவிடுவது. இது தான் ஒரு நபிக்கு இருக்கவேண்டிய குணமா? இது தான் உலக மக்கள் பின்பற்றத் தகுந்த ஒரு நல்ல நடத்தையா?

22) திருமணம் என்றுச் சொன்னால், பெண்ணை கேட்காமல் திருமண ஒப்பந்தம் போடுவது, பிறகு உடலுறவிற்கு அப்பெண்ணிடம் செல்வது இதுதான் முஹம்மதுவைப் பொறுத்தமட்டில் திருமணமா?

23) முஹம்மதுவின் ஒவ்வொரு திருமணத்திற்கும் ஒரு நல்ல காரணம் இருக்கும், ஒரு நியாயமான காரணம் இருக்கும், மற்றவர்களின் நன்மை அடங்கியிருக்கும் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள் இந்த மேற்கண்ட ஹதீஸில் சொல்லப்பட்ட திருமண ஒப்பந்தம் மூலமாக, எந்த நன்மை யாருக்கு உண்டாகி இருந்தது என்று விளக்க கடமைப்பட்டுள்ளார்கள்?

24) அல்லாஹ்வின் மிகப்பெரிய நபி, அதுவும் கடைசி நபியைப் பார்த்து "நான் ஒரு அரசி, நீ ஒரு இடையன்" உன்னைப்போல உள்ள நபருக்கு ஒரு அரசி அன்பளிப்பாக தருவாளா என்று ஒரு பெண் சொல்லும் படி நடந்துக்கொண்டாரே, இதனை கண்டித்து அல்லாஹ் வசனம் எதுவும் இறக்கவில்லையோ? அல்லது இது என் நபிக்கு சர்வ சாதாரணமான விஷயம் தானே என்று அல்லாஹ் விட்டுவிட்டாரா?

25) அந்த இடத்தில், அந்த குறிப்பிட்ட தோட்டத்தில் அந்த அறையில் தங்க வை, நான் அந்த மணித்துளியில் வந்து என் வேலையை முடித்துக்கொள்கிறேன் என்றுசொல்லி வைத்தாற் போல, தன் தோழர்களை வேறு இடத்தில் உட்கார வைத்துவிட்டு, உடலுறவு கொள்வதற்கு முஹம்மது வந்துள்ளார், இது ஒரு நல்ல மனிதருக்கு அல்லது ஆன்மீக தலைவருக்கு தகுதியான செயலாக தெரியவில்லையே! இஸ்லாமியர்களே உங்களுக்கு இப்படி தோன்றவில்லையா?

இந்த திருமண ஒப்பந்தம், மற்றும் முஹம்மதுவின் மேற்கண்ட நிகழ்ச்சி எந்த வகையில் இஸ்லாமுக்கு நன்மை செய்கிறது அல்லது இது பின்பற்றத்தகுந்த ஒரு நடத்தையா? முஹம்மது நடந்துக்கொண்டது போல, இந்த ஹதீஸை படிக்கும் இஸ்லாமியர்களின் தந்தை, ஒரு பெண்ணைப் பற்றி அவர்களின் பெற்றோர்களிடம் பேசி, ஒப்பந்தம் போட்டு, அந்தபெண்ணை ஒரு லாட்ஜில் ஒரு அறையில் தங்க வைத்துவிட்டு, பிறகு அவளிடம் சென்று, உன்னை எனக்கு அன்பளிப்பாக கொடு என்றுச் சொல்லும் போது, அந்த பெண் நீ ஒரு இடையன் நான் ஒரு அரசி உனக்கு இது தகுதியில்லை என்றுச் சொன்னால், உங்கள் தந்தையைப் பற்றி பெருமித்தோடு தலை நிமிர்ந்து நடந்துச் செல்வீர்களா?

சிந்தியுங்கள்....
உங்கள் இஸ்லாமிய ஆதாரமாகிய சஹீஹ் புகாரி ஹதீஸிலிருந்து ஒரு துகள் இது...

இவரையா கிறிஸ்தவர்கள் பின்பற்றவேண்டும் என்று சொல்கிறீர்கள்...?

2 comments:

  1. nanbar avarkalukku

    intha hadis il irunthu nalla padippinai

    irukkirathu allah nadiya vanukke nervazhi'il seluthuvan


    nanbar avarkalukku
    vaittrukku unna paruga koodiyavanum

    mala jala'thai sumakka koodiyavanum

    manithan

    iraivan illai

    yesu eppadi irunthar ?

    manithan iraivan ahamattan
    yesu intha ulagathil yethayum unnamal parugamal irunthargala

    thevai ullavan manithan
    thevai attravan anathin'meethum aatral udayavan'than iraivan

    adhamukku pirantha anaivarum siriya periya thavarugal seiyya koodivare


    irai thoothar thanmayileye iruntha yesu avargalai eppadi iraivanaga akkineergal

    sariseiyya vendiya ungal muranpadugalai sariseyungal ungal makkalai thelivoo pera seingal.

    ReplyDelete
  2. hello my dear, if you go through the history of Islam especially the period of Last Prophet, you can understand properly what is the real history of this Hadith and this incident.
    If it is wrong why Shabah (companions)reported this while they are ready for sacrifice even their lives for protecting the final messenger.
    wear a correct spectacle and see then can see the correct things. but if your spectacle is black colour (i.e. your thinning is wrong) then every thing going to be black.
    So brother come the true path and accept Allah as only one God and follow and accept all the messengers including Prophet Jesus and the final Prophet Muhammad (Peace be upon on all)

    May Allah guide you the true path.

    ReplyDelete