Thursday, November 18, 2010

அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...

அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...

ஒரு அரபு பெண்ணைப் பற்றி முஹம்மதுவிடம் அவரது தோழர்கள் அறிவித்தார்கள், அந்தப் பெண்ணை அழைத்துவரும் படி முஹம்மது கூறினார், அந்தப் பெண்ணும் வந்தாள். தன்னை திருமணம் செய்துக்கொள்ளும்படி முஹம்மது கூற, அவரை திருமணம் செய்துக்கொள்ள விரும்பாத அந்தப் பெண் முஹம்மதுவிடமிருந்து காக்கும்படி அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரினாள், முஹம்மது அப்பெண்ணை அனுப்பிவிட்டார். இந்த நிகழ்ச்சி சஹீஹ் புகாரி என்றுச் சொல்லக்கூடிய ஹதீஸ் தொகுப்பில் உள்ளது, கீழே அந்த ஹதீஸை கொடுத்துள்ளேன், படிக்கவும். அதன் பிறகு சில கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளது, இஸ்லாமியர்கள் அவைகளுக்கு பதில்களைத் தருவார்களா?

பாகம் 6, அத்தியாயம் 74, எண் 5637

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்களிடம் ஓர் அரபுப் பெண்ணைப் பற்றிக் கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணை (மணம் புரிந்து கொள்ள) அழைத்து வரும்படி அபூ உஸைத் அஸ்ஸாஇதீ(ரலி) அவர்களுக்கு உத்தரவிட, அவர் அப்பெண்ணை அழைத்து வர ஆளனுப்பினார். அவ்வாறே அந்தப் பெண் வந்து 'பன} சாஇதா' குலத்தாரின் கோட்டை ஒன்றில் தங்கினார். நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டு அப்பெண்மணியிடம் வந்து, அவர் (தங்கியிருந்த) இடத்தில் நுழைய அங்கே அந்தப் பெண் தலையைக் கவிழ்த்தபடி (அமர்ந்து) இருந்தார். நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் (தம்மை மணந்துகொள்ள சம்மதம் கேட்டுப்) பேசியபோது அவள், 'உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று சொன்னாள். நபி(ஸல்) அவர்கள் 'என்னிடமிருந்து உனக்குப் பாதுகாப்பு அளித்துவிட்டேன்' என்று கூறினார்கள். அப்போது மக்கள் (அந்தப் பெண்ணிடம்), 'இவர்கள் யார் என்று உனக்குத் தெரியுமா?' என்று கேட்க, அவள் 'தெரியாது' என்று பதிலளித்தாள். மக்கள், 'இவர்கள் தாம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உன்னைப் பெண் பேசுவதற்காக வந்தார்கள்' என்று கூறினார்கள். அந்தப் பெண் 'அவர்களை மணந்து கொள்ளும் நற்பேற்றை நான் இழந்து துர்பாக்கியவாதியாகி விட்டேனே' என்று (வருத்தத்துடன்) கூறினாள். . . . . . .

உலக மக்கள் பின்பற்றத் தகுந்த ஒரு நல்ல மாதிரியான வாழ்வை முஹம்மது வாழ்ந்துச் சென்றுள்ளார் என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள். எல்லாரும் முஹம்மது சொல்வதை கேட்டு பின்பற்றவேண்டும் என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள். முக்கியமாக கிறிஸ்தவர்கள் நம்பும் தீர்க்கதரிசிகளைப் போல‌ இவரும் இறைவன் அனுப்பிய நபி என்று சொல்கிறார்கள்.

இஸ்லாமியர்களின் வார்த்தைகளை ஆராயாமல் அப்படியே நம்பி இஸ்லாமை ஏற்றுக்கொண்டு உலக மக்கள் தங்கள் வாழ்வை நாசமாக்கிக்கொள்ள முடியாது. இஸ்லாம் நமக்குச் சொல்லும் முஹம்மதுவின் வாழ்க்கையை ஆராய்ந்து சரி பார்த்து முடிவு எடுக்கவேண்டும்.

நாம் மேலே கண்ட ஹதீஸின் படி, முஹம்மது ஒரு ஆன்மீக வழிகாட்டி என்று நம்பமுடியாது, அவருடைய எண்ணம், செயல் மற்றும் நோக்கம் என்ன என்பதை ஓரளவிற்கு இந்த ஹதீஸ் மூலமாக அறிந்துக்கொள்ளலாம். ஆகவே, கீழ்கண்ட கேள்விகளுக்கு இஸ்லாமியர்கள் பதில் கூறுவார்களா? சரியான பதிலைக் கூறி, தங்கள் முஹம்மது மீது சுமத்தப்படும் களங்கத்தை துடைப்பார்களா? இது எல்லா இஸ்லாமியர்களின் மீது விழுந்த கடமையல்லவா?

மேலே கண்ட ஹதீஸின் அடிப்படையில், இஸ்லாமியர்களுக்கு சில கேள்விகள்:

1) முஹம்மதுவிடம் யாரைப் பற்றி கூறப்பட்டது?


2) யார் முஹம்மதுவிடம் அந்த அரபுப்பெண்ணைப் பற்றி கூறியிருப்பார்கள்? (நபித்தோழர்கள் என அழைக்கப்பட்ட முஹம்மதுவின் தோழர்கள் கூறியிருப்பார்கள் சரியா தவறா?)


3) முஹம்மதுவிடம் என்ன கூறியிருப்பார்கள்? அந்த அரபுப்பெண்ணுக்கு உடல் நிலை சரியில்லை ஒரு முறை வந்து அவளுக்காக அல்லாஹ்விடம் துவா செய்யுங்கள் (வேண்டிக்கொள்ளுங்கள்) என்று கூறியிருப்பார்களா? அல்லது அவளுக்கு இருக்கும் பிரச்சனையை தீர்த்துவைக்கும் படி கூறியிருப்பார்களா?

4) மேலே கண்ட ஹ‌தீஸின் படி, அவளுடைய அழகைப் பற்றி வர்ணித்து கூறியிருப்பார்கள் என்பது என் கருத்து, இது சரியா தவறா?

5) அந்தப் பெண்ணை அழைத்துவந்த பிறகு, முஹம்மது அப்பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள தன் விருப்பத்தை தெரிவித்ததிலிருந்து, அப்பெண்ணின் அழகு பற்றி தான் நபித்தோழர்கள் அவரிடம் கூறியிருப்பார்கள் என்று அறிய முடிகிறது.

6) கேள்விகள் 4, 5 தவறானது என்று இஸ்லாமியர்கள் சொல்வார்களானால், வேறு எதைப் பற்றி நபித்தோழர்கள் கூறியிருப்பார்கள் என்று இஸ்லாமியர்கள் விளக்குவார்களா?

7) முஹம்மதுவிற்கு அனேக மனைவிகள் இருக்கும் போது, இன்னும் மனைவிகள் முஹம்மதுவிற்கு தேவை என்று நபித்தோழர்களுக்கு எப்படித் தெரியும்?

8) முஹம்மதுவின் விருப்பம்/ஆசை/காமம் எதுவென்று நபித்தோழர்களுக்கு நன்றாக தெரிந்து இருக்கிறது, அதனால், தான் தங்கள் குருவிற்கு விருப்பமானது எது என்று புரிந்துக்கொண்டவர்களாக கண்ணில் பட்ட அழகான பெண் பற்றி தங்கள் குருவிடம் சொன்னார்கள். பெண்கள் என்றால் அதிக விருப்பமில்லாத ஒரு மனிதரிடம் அவருடைய சீடர்கள் பெண்களைப் பற்றி கூறுவார்களா?

9) அபூ உஸைத் அஸ்ஸாஇதீ(ரலி) என்பவர் என்ன செய்யவேண்டும் என்று முஹம்மது உத்தரவிட்டார்?

10) முஹம்மதுவின் இந்த உத்தரவின் படி, அந்த அரபுப்பெண்ணை அபூ உஸைத் அழைத்துவந்தாரா? இல்லையா?

11) அழைத்து வரப்பட்ட பெண் எங்கு தங்க வைக்கப்பட்டாள்? ஏன் அந்த பெண் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தங்கவைக்கப்பட்டாள்?

12) ஒரு குறிப்பிட்ட கோட்டையில் தங்கி இருந்த அந்த பெண்ணை சந்திக்கச் சென்றது யார்?

13) முஹம்மது அப்பெண்ணிடம் என்ன கூறினார்?

14) முஹம்மது தம்மை திருமணம் செய்துக்கொள்ளும்படி அப்பெண்ணிடம் கூறினாரா?

15) முஹம்மதுவின் கேள்விக்கு அந்தப்பெண் கொடுத்த பதில் என்ன?

16) முஹம்மதுவை திருமணம் செய்துக்கொள்ள அந்தப் பெண் சம்மதம் தெரிவித்தாளா?

17) ஏன், அந்தப் பெண் "உம்மிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோருகிறேன்" என்று கூறினாள்?

18) ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளவேண்டும் என்ற விருப்பமிருப்பவர்கள், அப்பெண்ணை தனியாக அழைத்து, ஒரு கோட்டையில் தங்க வைத்து பெண் பேசுவார்களா? அல்லது அப்பெண்ணின் பெற்றோர்களிடம், அல்லது பெரியவர்களிடம் முதலாவது தன் விருப்பத்தைச் சொல்லி, பெற்றோர்கள் ஒப்புக்கொண்ட பிறகு, பெற்றோர்களின் உதவியுடன் தன் திருமண விருப்பத்தை அப்பெண்ணிடம் சொல்ல முயற்சி எடுப்பார்களா?

19) ஒரு வழிகாட்டி என்ற நிலையில் இருக்கும் முஹம்மதுவிற்கு, இதுவரை இருக்கும் மனைவிகள் போதாதா? இன்னும் மனைவிகள் தேவையா? கணக்கில்லாமல் திருமணம் செய்துக்கொள்ள விரும்பும் ஒருவர் எப்படி உலக மக்களுக்கு வழிகாட்டியாக இருக்க முடியும்?

20) அந்த பெண்ணின் மறுப்பிற்கு முஹம்மது அளித்த பதில் என்ன?

இப்போது நாம் பார்க்கப்போகும் கேள்விகள், ரௌடித்தனம் செய்து அப்பெண்ணை கடத்திக்கொண்டு வந்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தை உண்டாக்கும்.

21) முஹம்மது "பாதுகாப்பு" அளித்துவிட்டேன் என்று கூறிச் சென்றுவிட்ட பிறகு, அந்த பெண்ணிடம் மக்கள் என்ன கூறினார்கள்?

22) "இவர் யார் என்று உனக்குத் தெரியுமா" என்று மக்கள் கேட்டபோது, தனக்கு "தெரியாது" என்று அப்பெண் பதில் கூறியிருக்கிறாள். அப்படியானால், இந்தப் பெண்ணை நபித்தோழர் அபூ உஸைத் எப்படி அழைத்துக்கொண்டு வந்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் தங்க வைத்திருந்தார்?

23) அந்தப்பெண்ணை அபூ உஸைத் அழைக்க சென்றபோது, அப்பெண்ணிடம் என்ன கூறியிருந்திருப்பார்?

24) உன்னை இறைத்தூதர் திருமணம் செய்துக்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார் என்று சொல்லி அழைத்து இருந்திருப்பாரா?

25) அல்லது ஒரு முக்கியமான நபர் உன்னை அழைத்துள்ளார், அவர் உன்னிடம் பேசவேண்டுமாம் என்று சொல்லி இருந்திருப்பாரா?

26) யாராவது ஒரு பெண், உன்னை யாரோ ஒருவர் அழைக்கிறார் வா! என்று அழைக்கும் போது வந்துவிடுவாளா?

27) மேற்கண்ட ஹதீஸின் படி, தன்னிடம் பேசியவர் "இறைத்தூதர்" என்று தனக்கு தெரியாது, அல்லது யார் என்று தனக்குத் தெரியாது என்று அப்பெண் கூறியிருப்பதிலிருந்து, அபூ உஸைத் அப்பெண்ணை "பலவந்தப்படுத்தி, கடத்திக்கொண்டு வந்து இருக்கவேண்டும்" என்று புரிகிறது? இந்த முடிவு சரியானது இல்லை என்று நாம் கருதினால்,

தன்னை அழைத்தவர் யார்?

ஏன் என்னை அழைக்கிறார்?

நான் ஏன் வரவேண்டும்?

என்னை கட்டாயப்படுத்தி வரவேண்டும் என்றுச் சொல்லும் நீங்கள் யார்?

உங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது?

என்று அப்பெண் முதலிலேயே கூறியிருப்பாள், அந்தப் பெண்ணின் இந்த கேள்விகள் சாத்தியமா இல்லையா?

28) கேள்வி எண் 27ல் கூறப்பட்ட கேள்விகளை அப்பெண் கேட்டு இருந்திருப்பாள், அப்போது அபூ உஸைத் என்ன பதில் கூறியிருந்திருப்பார்? இதற்கெல்லாம் நான் பதில் சொல்லமாட்டேன், கூப்பிட்டால் வரவேண்டும் அவ்வளவு தான் என்று கூறியிருப்பாரா? அல்லது என்னை அனுப்பியவர் இறைத்தூதர் முஹம்மது ஆவார், அவர் உன்னிடம் பேசவேண்டுமாம், அவர் உன்னை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார் என்று பதில் சொல்லியிருந்திருப்பாரா?

29) நீ கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் சொல்லமாட்டேன் என்றுச் சொல்லியிருந்தால், அந்தப்பெண் வர மறுத்து இருந்திருப்பாள், அப்போது அவளை கடத்திக்கொண்டு வந்து, அந்த கோட்டையில் இருக்கும் படி செய்திருப்பார்கள், ஆக, இந்த செயல், முஹம்மதுவின் தோழர்கள் தங்கள் குருவிற்காக பெண்களை கட்டாயப்படுத்தி, கடத்திக்கொண்டு வருகிறவர்களாக தென்படுவார்கள், இது சரியானதா? இது ஏற்கத்தகுந்ததா?

30) இல்லை, கேள்வி 29ல் கூறப்பட்டது தவறு, அபூ உஸைத், அப்பெண்ணிடம் யார் அழைக்கிறார்கள், என்ன காரணத்திற்காக அழைக்கிறார்கள் என்று சொல்லி இருப்பார் என்று இஸ்லாமியர்கள் சொன்னால், மேற்கண்ட ஹதீஸின் படி, இது கூட ஏற்கத்தகுந்தது அல்ல, காரணம் என்னவென்றால், மக்கள் அப்பெண்ணிடம் கேள்வி கேட்டப்போது, "அவர் யார் என்று எனக்கு தெரியாது" என்று பதில் அளித்து இருக்கிறாள். ஆக, அப்பெண் சொல்லிய பதில் மூலமாக நாம் அறிவது என்னவென்றால், அந்தப்பெண்ணை பயப்படவைத்து, கடத்திக்கொண்டு வந்து இருக்கவேண்டும்? அல்லது அவர் இறைத்தூதர் என்று ஏற்கனவே தெரிந்திருந்தும் அப்பெண் அவரை திருமணம் செய்துக்கொள்ள விருப்பமில்லாதவளாக "எனக்கு அவர் யார் என்று தெரியவில்லை என்று பொய் சொல்லி இருக்கவேண்டும்".

31) அந்தப் பெண் பொய் சொல்லியிருந்தாலும், உடனே, அபூ உஸைத் சொல்லியிருப்பார், இல்லை, இந்த பெண் பொய் சொல்கிறாள், நான் ஏற்கனவே அவளிடம் எல்லா விவரங்களையும் சொல்லியிருக்கிறேன் என்று சொல்லியிருப்பார்கள். ஆனால், இப்படி நடந்ததாக தெரியவில்லை. ஆக, தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி கொண்டு வந்திருக்கவேண்டும், தன்னை பாதுக்காத்துக்கொள்ள அந்த பெண் "அல்லாஹ்விடமிருந்து பாதுகாப்பு" கோரியிருக்கவேண்டும், இந்த முடிவிற்குத் தான் நாம் வரமுடியும்.

32) "நான் துர்பாக்கியவதியாகிவிட்டேன்" என்று அந்தப் பெண் சொன்னாள் என்று ஹதீஸ் சொல்வது ஏற்கத்தகுந்தது அல்ல, ஏனென்றால், இந்தப் பெண் தன் தவறுக்காக வருந்துகிறாள், உம்மை மண‌ந்துக்கொள்ளும் நற்பேற்றை இழந்தேன் என்று அப்பெண் வருந்துகிறாள் என்று முஹம்மதுவிற்கு மறுபடியும் சொல்லியிருந்தால், அவர் வந்து அவளை திருமணம் செய்துக்கொண்டு இருந்திருப்பார், இதில் எந்த சந்தேகமும் இல்லை. அறியாமையில் தவறு செய்தாள், இப்போது விரும்புகிறாள் எனவே திருமணம் செய்துக்கொள்வதில் தவறு இல்லை என்று முஹம்மது சொல்லி திருமணம் செய்துகொண்டு இருந்திருப்பார். இந்த பெண்ணிடம் ம‌றுபடியும் பேசி திருமணம் செய்துக்கொண்டதாக, ஏதாவது ஹதீஸ் இருந்தால் இஸ்லாமியர்கள் முன்வைக்கலாம்.

33) முஹம்மதுவின் ஒவ்வொரு திருமணத்திற்கும் ஒரு நல்ல காரணம் இருக்கும், ஒரு நியாயம் இருக்கும் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள், முஹம்மது இப்பெண்ணை திருமணம் செய்துக்கொள்வதற்கு அல்லாஹ்விடமிருந்து இறங்கிய காரணமென்ன? இப்பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள முஹம்மது விரும்பியதற்கு காரணமென்ன? அந்த பெண்ணின் அழகா? அல்லது வேறு என்ன காரணம் இருக்கமுடியும்? உம்மை திருமணம் செய்துக்கொள்ளமாட்டேன் என்றுச் சொன்னாள், சரி என்று ஒப்புக்கொண்டு சென்றுவிட்டார், இதில் தெய்வீக காரணம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. விரும்பினார், மறுத்துவிட்டாள் சரி என்று விட்டுவிட்டார் அவ்வளவு தான். முஹம்மதுவிற்கு பெண்கள் விஷயத்தில் எப்போதும் திருப்தி இருக்காதா?

மேற்கண்ட விவரங்களிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், முஹம்மதுவின் விருப்பம் என்ன? அவருடைய நாடித்துடிப்பு என்னவென்று தன்னுடைய தோழர்களுக்கு தெரிந்து இருக்கிறது. எனவே கண்ணில் பட்ட நல்ல அழகான பெண்கள் பற்றி அவர்கள் அவரிடம் கூறியிருக்கிறார்கள். மேற்கண்ட ஹதீஸ் மூலம் அறிவது என்னவென்றால், கட்டாயப்படுத்தி அழைத்துக்கொண்டு வந்து ஒரு அறைக்குள் அடைத்து சம்மந்தம் பேசும் இறைத்தூரதை நாம் காண்கின்றோம். அல்லாஹ்விடம் அப்பெண் பாதுகாப்பு கோரிவிட்டதால், அவள் தப்பித்துவிட்டாள். இத்தனை மனைவிகள் தனக்கு இருக்கும் போதும், இன்னும் ஏன் பெண்ணாசை முஹம்மதுவிற்கு விடவில்லை?

இவரையா எல்லாரும் பின்பற்றவேண்டும் என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள்... பீஜே போன்றவர்கள் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்று நிகழ்ச்சி நடத்துகின்றார். இப்படிப்பட்ட முஹம்மது ஸ்தாபித்த மார்க்கமா இனிய மார்க்கம்.. அந்தோ பரிதாபம்.

சரி, மேற்கண்ட ஹதீஸுக்கும் கேள்விகளுக்கும் சரியான நேர்மையான பதிலை இஸ்லாமியர்களில் யாராவது பதித்தால், அவைகள் சரியாக இருக்கும் பட்சத்தில் இந்த கட்டுரையை நான் எடுத்துவிடுவேன். (இப்படி நான் சொன்னேன் என்றுச் சொல்லி, பிஜே அவர்கள், இந்த ஹதீஸ் பலவீனமான ஹதீஸ், இது பொய்யான ஹதீஸ் என்றுச் சொன்னால், நான் ஒப்புக்கொள்ளமாட்டேன், ஏனென்றால், பிஜே அவர்கள் சொல்வது போல ஹதீஸ்களை ஒதுக்கினால், கடைசியில் ஒன்றுமே மிஞ்சாது).

9 comments:

  1. Daai Keavala payalea nee muthalla un mukaththai veliyila kaattu appuram peasalaam matrathai patri...

    Ok...........

    ReplyDelete
  2. இஸ்லாமியர்கள் கிறிஸ்தவத்தைப் பற்றிக் கேவலமாகப் பேசும்போதும் எழுதும்போதும் பிரச்சாரம் செய்யும்போதும் மேற்கண்டவாறு பெயர் அறியாதவர் எழுதியதுபோல் வார்த்தைகளைக் கொப்பளிக்க மாட்டார்கள். வேண்டுமென்றால், ‘டேய் கேவலப் பயளே....’ போன்ற அநாகரிக வார்த்தைகள் கிறிஸ்தவர்களிடம் இருந்து வந்ததை ஆதாரமாகக் காட்டடும்.

    இந்த அநாகரிக வார்த்தைகளை ஓர் இஸ்லாமியன் தான் எழுதினான் என்பதற்கு ஆதாரம் உண்டா? - என்று இஸ்லாமியர்கள் கேட்கக் கூடும்.

    ஆனால், இது போன்ற வம்பு சண்டைகளைப் பார்த்து எங்களுக்குப் புளித்து விட்டது. இஸ்லாமியர்கள் திருந்த மாட்டார்கள். தாங்கள் தர்க்க ரீதியாகச் சிந்திக்கிறவர்கள் என்று சொல்லிக் கொள்வார்களே ஒழிய, அதனைச் செயல்பூர்வமாகக் காட்ட மாட்டார்கள்.

    ReplyDelete
  3. paavam mohammed and his followers by pastor gideon

    ReplyDelete
  4. mearkanda hadeesil unmai ulladho illayo,aanaal mohamed endha valukkattaayamum seiyyavillai enbadhum,karpalikkavillai enbadhu,moolaiyulla evarukkum puriyum,hadisgal 100% namba thagudiyanavai illai endru muslimgalaagiya engalukku nanraaga theriyum,hadis enbadhu sevi vazhi kaetta mohammaduvai pattriya seidhigalin thoguppudhaan,adhai test seidhu edhu aadhaarapoorvamana hadiso adhai mattumdhaan islamiyargal eatrukkolvaargal,

    ReplyDelete
  5. sadam hussain KMS, KILAKARAIAugust 21, 2011 at 4:37 AM

    (நபியே!) நீர் சொல்வீராக: "காஃபிர்களே!

    [109:2]

    நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.

    [109:3]

    இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.

    [109:4]

    அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.

    [109:5]

    மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.

    [109:6]

    உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்."

    ReplyDelete
  6. vasikkira muslim nanbargal sinthithu paarkavendum kobathai mattum velikattuvathu avrgaladu sinthikum thiran kurainthiruppathaalaagum

    ReplyDelete
  7. Intha haditsil Yenna Tavar irukirathu? Ungal parvayilthan thavar irrukirathu...
    Ithaan artham pennin anumathi illamal thirumanam seiyakudathu.
    Ungalon sinthanayai matrungal Christuva sagotharargale... Ungalin sinthanayai maatrungal. Intha kelvi ketavarin sinthanai ivvolou kevalamaga irrukirath. Manjalkamalai ullavanuku ullagam manjal yenbathupol admini kannuku thondrukirathu anithum kaamamaga irrukirathu

    ReplyDelete
  8. இந்த பதிவு ஒரு கெட்ட நோக்கத்தோடு செய்யப்பட்ட பதிவாகத்தோன்றுகிறது
    நீங்கள் இந்த விடயத்தை தவிர்த்த மற்ற
    நபிகளாரின் போதனைகள் ,காட்டிய வழிமுறைகளைப்பற்றி சிந்தித்து அதன்பின்
    இப்போதுநீங்கள் கூறும் கூற்றோடு ஒப்பிட்டு
    பாருங்கள் விளக்கம் பெறுவீர்.இல்லை இதை மட்டும்தான் முதலில் விவாதிப்பேன் என்று கூற
    முற்பட்டால் நீங்கள் தொடங்கியுள்ள விவாதம்
    உள் நோக்கமுடையதும் கோணல் பார்வையும் ஆகும். தொடர்வோம் இன்ஸா அல்லாஹ்

    ReplyDelete